அடா ஷர்மாவின் புலனாய்வு!

நடிகை அடா ஷர்மா அடுத்து நடிக்கவுள்ள படம் குறித்து யூகங்களின் அடிப்படையில் ஆளாளுக்கு ஒரு தகவலைச் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட அடா ஷர்மா வாயிலாகவே தற்போது இவ்விஷயத்தில் பதில் கிடைத்துள்ளது.

சிம்பு, நயன்தாரா இணைந்து நடித்திருந்த இது நம்ம ஆளு படத்தில் கேமியோ ரோலில் தலைகாட்டியிருந்தார் நடிகை அடா ஷர்மா. இந்தி, கன்னடம் தெலுங்கு என பிஸியாக இயங்கிவந்த அவர் தற்போது தமிழில் பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின் -2 வில் நடிக்கிறார். இந்நிலையில் தெலுங்கில் அவர் அடுத்து நடிக்கவுள்ள படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவு , தெலுங்கில் அவர் அடுத்து நடிக்கும் படம், டாக்டர் ராஜசேகரின் ‘கல்கி’தான் என உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது
புலனாய்வு த்ரில்லர் வகைப் படமான இதை பிரசாந்த் வர்மா இயக்குகிறார். 1983ஆம் ஆண்டு நடக்கும் விதமாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளதால் தான் நடித்த 1920 எனும் பீரியடு படத்திற்கு பிறகு அடா ஷர்மா நடிக்கும் பீரியடு படமாக இது அமைந்துள்ளது.
தான் நடித்த ஹார்ட் அட்டாக்,ஷனம் சன் ஆஃப் சத்யமூர்த்தி போன்ற ஏதேனும் வித்தியாசமான ரோல் உள்ள படங்களில் நடிக்கவே முயற்சி செய்வதாகக் கூறும் அடா ஷர்மா, கல்கி அப்படியான ஒரு படமாக அமையும் என நம்புவதாகவும் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும், இந்த படத்தில் தான் தாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது த்ரில்லான அனுபவத்தைக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார் அடா ஷர்மா.
தமிழில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, நிக்கி கல்ராணியுடன் இணைந்து தான் நடிக்கும் சார்லி சாப்ளின்-2 வெற்றிப்படமாக அமைகிற பட்சத்தில் அடா ஷர்மாவுக்கு தமிழிலும் அடுத்தடுத்து படங்கள் புக் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Powered by Blogger.