சர்வதேசத்தின் நலனுக்காகவே கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது- கஜேந்திரன்

இந்தியா மற்றும் மேற்குலகத்தின் நலனுக்காகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு ரணில் தரப்பினர் எந்தவொரு நன்மையையும் செய்யாத நிலையில், எந்த உத்தரவாதத்துக்கு இணங்க ஆதரவு வழங்கப்பட்டுள்ளது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
Powered by Blogger.