யாழ் சைவ உணவகம் ஒன்றில் சாப்பாட்டுக்குள் அட்டை!

யாழ். நகருக்குள் இயங்கும் சைவ உணவகம் ஒன்றில் சாப்பாட்டுக்குள் அட்டை காணப்பட்ட நிலையில் தவறு நடந்து விட்டது மன்னித்து கொள்ளுங்கள் என கடை உரிமையாளர் சாதாரணமாக பதிலளித்துள்ளார்.


இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.நகருக்குள் உள்ள சைவ உணவகத்தில் இளைஞர் ஒருவர் உணவு உண்டு கொண்டிருந்தபோது உணவுக்குள் அட்டை கிடந்துள்ளது.

இதனை அவதானித்த அந்த இளைஞன் கடையின் உரிமையாளரை அழைத்து ஒரு மனிதன் சாப்பிடும் உணவில் இவ்வாறு இருக்கலாமா? என கேட்டு உணவுக்குள் இருந்த அட்டையை காட்டியுள்ளார்.

எனினும் தவறு நடந்துவிட்டது மன்னித்து கொள்ளுங்கள் என கடை உரிமையாளர் பதிலளித்துள்ளார். இதனை அந்த இளைஞன் சமூக வலைத்தளத்தில் நேரலையாக காண்பித்துள்ளதுடன், சுகாதார பரிசோதகரிடமும் முறையிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.