தீபாவளி சிறப்பு பலன்கள் எப்படி??

அன்பர்களே தீபாவளி என்பது நமது வாழ்வில் மிக முக்கியமான பண்டிகை. இந்த தீபாவளியில் அனைவருக்கும் இருள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க வேண்டி இறைவனைப் பிரார்த்திப்போம். தீபாவளி என்பது லக்ஷ்மிக்கு உகந்த தினமாகும். தனத்திற்கு தேவதை லக்ஷ்மி. எனவே பன்னிரு ராசிக்காரர்களுக்கும் இந்த தீபாவளி முதல் அடுத்த தீபாவளி வரை எப்படி இருக்கும்?
  
12 ராசிகாரர்களுக்கும் பொதுவான பரிகாரம்: முன்னோர்கள் வழிபாடு
மேஷம்:
தனகாரகன் சுக்கிரனை அடிப்படையாகக் கொண்ட உங்களிடம் வேகம் இருக்க வேண்டிய அளவிற்கு விவேகமும் வேண்டியது அவசியம். இந்தாண்டு தீபாவளி மிக இனிமையானதாக இருந்தாலும் பணம் சார்ந்த விஷயங்களில் சில நெருக்கடி ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். குழந்தைகள் மூலம் செலவினங்கள் அதிகரிக்கும். தொழில் உத்தியோகத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். 
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வருவதுடன் ஸ்ரீமஹாலக்ஷ்மி வழிபாடை இடையறாது செய்து வரவும். 
ரிஷபம்:
தனகாரகன் சுக்கிரனை ராசிநாதனாகவும் வித்யாகாரகன் புதனையும் அடிப்படையாகக் கொண்ட உங்களிடம் மற்றவர்களை கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் கவர்ச்சி நிறைந்திருக்கும். இந்தாண்டு தீபாவளி மிக சுகமானதாக இருந்தாலும் குடும்பத்தில் சில வாக்குவாதங்களுக்குப் பிறகு மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணை உறவினர்களுடன் கருத்துகளை பரிமாறும் போது கவனம் தேவை. குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். தொழில் உத்தியோகத்தில் வேலை இடமாற்றம், வெளிநாட்டு பயணம் ஆகியவை கிட்டும். 
பரிகாரம்: நவகிரஹத்திற்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வருவதுடன் பெருமாளுக்கு ஆராதனை செய்வது நன்மை தரும். 
மிதுனம்:
தனாதிபதியாக சந்திரனையும் விரையாதிபதியாக சுக்கிரனையும் அடிப்படையாக கொண்ட உங்களிடம் சிக்கனம் இருந்தாலும் செலவு ஒரேயடியாக செய்வீர்கள். இந்தாண்டு தீபாவளி மிக மகிழ்ச்சியானதாக இருந்தாலும் குடும்பத்தில் சில மருத்துவ செலவுகள் இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் பிணக்குகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் உங்கள் மனம் போல் நடந்து கொள்வார்கள். தொழில் உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகிறது. சொந்த தொழில் செய்வீர்கள். 
பரிகாரம்: பெருமாளுக்கு அகல் விளக்கு ஏற்றி வலம் வருவதுடன் ஆதிபராசக்தியை முடிந்த வரை சந்திர ஹோரையில் வழிபடுவதால் பணம் சார்ந்த பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வரும். 
கடகம்:
அதிவேக சஞ்சார குணமுடைய சந்திரனை ராசிநாதனாகவும், ராஜ கிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை தனாதிபதியாகவும் கொண்ட நீங்கள் சொல்லும் சொல்லை பணமாக்கும் வித்தை தெரிந்தவர்கள். இந்தாண்டு தீபாவளி மிக மனமுவந்து இருந்தாலும் குடும்பத்தில் சில வாக்குவாதங்களுக்கும் குறைவிருக்காது. வாழ்க்கைத்துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் குழந்தைகளால் ஏற்படலாம். தொழில் உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் வரும். முதலீடுகளை செய்வீர்கள்.
பரிகாரம்: அம்பாளை அடிக்கடி வணங்கி வருவதுடன் முடிந்தவரை பிரதோஷ அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கிக் கொடுப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 
சிம்மம்:
ஆளுமை கிரகம் என்று சொல்லக் கூடிய சூரியனை ராசிநாதனாகவும் வித்யாகாரகன் என்றழைக்கக்கூடிய புதனை தனாதிபதியாகவும் கொண்ட நீங்கள் கொஞ்சம் அவசரபுத்திகாரர். இந்தாண்டு தீபாவளி உங்கள் வாழ்வில் மறக்க இயலாத பண்டிகையாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் வரிசையாக வந்த வண்ணம் இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் உள்ள உறவுமுறை நல்லபடியாக இருக்கும். தொழில் உத்தியோகத்தில் நல்ல பலன்களை சந்திக்க ஆயுத்தமாக இருங்கள். மாசி மாதத்திற்குப் பிறகு இன்னும் சிறப்பாக இருக்கும். 
பரிகாரம்: சிவனுக்கு அடிக்கடி அபிஷேகம் செய்து வருவதுடன் முடிந்தவரை ராம நாமம் ஜெபிப்பதும், பெருமாளுக்கு தயிர் சாதம் படைத்து பக்தர்களுக்கு  வழங்குவதும் பொருளாதார சிக்கல்களை நீக்கும். 
கன்னி:
வித்யாகாரகன் புதனை ராசிநாதனாகவும், தனகாரகன் சுக்கிரனை தனாதிபதியாகவும், சூரியனை விரையாதிபதியாகவும் கொண்ட நீங்கள் உழைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். இந்தாண்டு தீபாவளி உங்களுக்கு அதிகமான செலவைத் தருவதாக இருக்கும். குடும்பத்தில் நீண்ட பிரயத்தினத்திற்குப் பிறகு  சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கைத்துணையுடன் கசப்புணர்வு ஏற்பட்டு மறையும். தொழில் உத்தியோகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கடும் முயற்சிகளுக்குப் பின் கிடைக்கும். 
பரிகாரம்: சாஸ்தாவை அடிக்கடி வணங்கி வருவதுடன் பெருமாள் ஆலயத்திற்கு மல்லிகை மலர் அர்ப்பணம் செய்து வணங்கி வரவும். 
துலாம்:
தனகாரகன் சுக்கிரனை ராசிநாதனாகவும், தைரிய காரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாயை தனாதிபதியாகவும் கொண்ட நீங்கள் அனைவரையும் சமமாக பாவிக்கும் தன்மையுள்ளவர். இந்தாண்டு தீபாவளி உங்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் நன்மைகளை அள்ளித் தர போகிறது. குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். ஆனாலும் வாக்குவாதங்களும் இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த மனக்கிலேசங்கள் மறையும். தொழில் உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். முதலீடு  செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனைகள் பெறவும். 
பரிகாரம்: பெருமாளை அடிக்கடி வணங்கி வருவதுடன் தாயாருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
விருச்சிகம்:
தைரியகாரகன் செவ்வாயை ராசிநாதனாகவும், சுபகாரகன் என்று வணங்கக்கூடிய குருவை தனாதிபதியாகவும் கொண்ட நீங்கள் எடுத்த முயற்சிகளில் பின் வாங்காதவர். இந்தாண்டு தீபாவளி உங்களுக்கு அனுபவம் தரும் பண்டிகையாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி குடி கொண்டிருந்தாலும் அவ்வப்போது மனதிற்கு சங்கடம் அளிக்கும் சம்பவங்களும் நிகழும். வாழ்க்கைத்துணையுடன் அடிக்கடி கருத்து மோதல்கள் வரலாம், நீங்கள் விட்டுக் கொடுப்பது மட்டுமே இதற்கான மருந்து. தொழில் உத்தியோகத்தில் நீண்ட முயற்சிக்குப் பின் காரியங்கள் நிகழும். 
பரிகாரம்: முருகனுக்கு செவ்வரளி பூவை வழங்குவதுடன் முடிந்த வரை நவக்ரஹங்களை வலம் வரவும். 
தனுசு:
சுபகாரகன் குருவை ராசிநாதனாகவும், தொழில் ஆயுள் காரகன் என்று போற்றக்கூடிய சனியையும் கொண்ட நீங்கள் அனுபவத்தால் பாடம் கற்பவர்கள். இந்தாண்டு தீபாவளி பொன்னான நிகழ்வாக இருக்கும்.  குடும்பத்தில் அதிகமான சோதனைகளுக்குப் பின் நல்ல நிகழ்வுகள் நடக்கும். வாழ்க்கைத்துணையுடன்  சிறு சிறு மோதல்கள் வந்து மறையும். குழந்தைகள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள். தொழில் உத்தியோகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். 
பரிகாரம்: நவக்கிரக குருவை வணங்கி வருவதுடன் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போட்டு வணங்கி வரவும். 
மகரம்:
தொழில் ஆயுள் காரகன் என்று போற்றக்கூடிய சனியையே தனகாரகனாகவும் கொண்ட நீங்கள் வாக்குவாதம் செய்வதில் வல்லவர்கள். இந்தாண்டு தீபாவளி வரவும் செலவும் கலந்ததாக இருக்கும். குடும்பத்தில் அதீத முயற்சிகளுக்குப் பின் காரியங்கள் நிகழும். வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது ஏற்பட்ட மனக்கிலேசங்களுக்கு ஒரு முடிவு வரும். குழந்தைகள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். தொழில் உத்தியோகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள். 
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை வாங்கி சாற்றி வழிபடுவதுடன் காவல் தெய்வங்களை வணங்கி வருவதால் நன்மைகளைப் பெறுவீர்கள். 
கும்பம்:
தொழில் ஆயுள் காரகன் என்று போற்றக்கூடிய சனியை ராசிநாதனாகவும் சுபகாரகன் குருவை தனாதிபதியாகவும் கொண்ட நீங்கள் உழைப்பின் மூலம்தான் முன்னேற முடியும் என்று நம்புபவர். இந்தாண்டு தீபாவளி மிக அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் மறைந்து நல்ல உறவுமுறை வரும். குழந்தைகள் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள். தொழில் உத்தியோகத்தில் மிக பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். புதிதாக வீடு மனை வாங்குவீர்கள்.
பரிகாரம்: நவகிரங்களில் சனியை வழிபடுவதுடன் அவ்வப்போது அருகில் இருக்கும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வருவதால் தடைபட்ட காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
மீனம்:
சுபகாரகன் குருவை ராசியாதிபதியாகவும் தைரிய காரகன் செவ்வாயை தனாதிபதியாகவும் கொண்ட நீங்கள் மற்றவர்களுக்கு உதவிகரமாய் இருப்பார்கள். இந்தாண்டு தீபாவளி சோகங்களை மறைத்து சந்தோஷங்களை கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தில் முடிவுகளை நீங்கள் எடுப்பதற்கு முன் தகுந்த ஆலோசனை பெறவும். வாழ்க்கைத்துணையுடன் கசப்புணர்வு ஏற்படலாம். குழந்தைகள்  உங்களுக்கு அதைரியத்தைக் கொடுக்கலாம். தொழில் உத்தியோகத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். பட்டாசுகளை வெடிக்கும் போது கவனம் தேவை.
பரிகாரம்: ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு அடிக்கடி போய் வலம் வருவதுடன் நவகிரஹ ஹோமம் செய்வதால் நன்மை ஏற்படும்.
Powered by Blogger.