நாடாளுமன்றம் ஒத்திவைப்புக்கான காரணம் வெளியிட்ட மஹிந்த!

வரவு – செலவுத்திட்டம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இதன்காரணமாகவே நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


அல்ஜசீரா தொலைக்காட்சி சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் தற்போது தமக்கு பெரும்பான்மை உள்ளதாகவும், அரசியலமைப்பிற்கமையவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை பிரதமராக தெரிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களின் நலன் தொடர்பில் தமது அரசாங்கம் அக்கறையுடன் செயற்படும் எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.