சம்பந்தன் அநுர இடையே பேச்சுவார்த்தை!

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இன்று (05) எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, பிமல் ரத்னாயக்க, கே.டி லால்காந்த ஆகியோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.