விமர்­சித்­த­வர்­கள் மீது வழக்­கு!

துரோகி என்று ஏனை­யோரை விமர்­சிப்­ப­வர்­கள் முத­லில் தங்­க­ளைச் சுய பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். அமைச்­சுப் பத­விக்­காக விலை போவ­தாக என்னை விமர்­சிப்­ப­வர்­கள் அதனை நிரூ­பிக்க வேண்­டும். அவ்­வாறு

என்னை விமர்­சித்­த­வர்­கள் மீது வெகு விரை­வில் வழக்குத் தொட­ர­வுள்­ளேன். இவ்­வாறு கட்சி தாவிப் புதி­தா­கப் பிரதி அமைச்­சுப் பத­வி­யேற்­றுக் கொண்ட ச.வியா­ழேந்­திரன் தெரி­வித்­தார்.

கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
எதிர்க்கட்­சி­யில் இருந்து கொண்டு ஆளும் கட்­சி­யைப் பாது­காப்­ப­தற்கு பதி­லாக அர­சு­டன் இணைந்து மக்­க­ளுக்கு சேவை செய்­வது சிறந்­த­தா­கும்.
புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள தலைமை அமைச்­சர் மகிந்­த­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்­காக நான் அர­சு­டன் இணை­ய­வில்லை. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பல்­வேறு சந்­தப்­பங்­க­ளில் எனக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யுள்­ளார். அவ­ரின் செயற்­பா­டு­க­ளில் திருப்தி அடைந்­துள்­ளேன் – என்­றார். 

No comments

Powered by Blogger.