இலங்கைக்கு பல மில்­லி­யன் டொலர் உத­வி­கள் நிறுத்­தம்!

இலங்­கை­யில் அர­சி­யல் குழப்­ப­நிலை உரு­வான பின்­னர் அமெ­ரிக்­கா­வும், ஜப்­பா­னும் பல மில்­லி­யன் டொலர்­கள் பெறு­ம­தி­யான நிதி­யு­த­வியை இடை­நி­றுத்­தி­யுள்­ளன என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ளார்.


ரொய்ட்­டர் செய்­திச்­சே­வை க்கு வழங்­கி­யுள்ள பேட்­டி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து என்னை நீக்­கி­ய­தன் கார­ண­மாக இலங்­கை­யில் ஜன­நா­ய­கத்­தின் எதிர்­கா­லம் குறித்து கேள்­வி­கள் எழுந்­துள்­ள­தால் ஜப்­பா­னும் அமெ­ரிக்­கா­வும் பல மில்­லி­யன் டொலர்­கள் அபி­வி­ருத்தி நிதியை இடை­நி­றுத்­தி­யுள்­ளன. மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான அரசு தொடர்­பில் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் மத்­தி­யில் கரி­ச­னை­கள் காணப்­ப­டு­கின்­றன.

பெருந்­தெ­ருக்­கள் அபி­வி­ருத்தி மற்­றும் காணி நிர்­வா­கத்­தில் முன்­னேற்­றம் காணும் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக 500 மில்­லி­யன் டொலர்­களை வழங்­க­யி­ருந்த அமெ­ரிக்கா அதனை தற்­போது இடை­நி­றுத்­தி­யுள்­ளது. தொட­ருந்து அபி­வி­ருத்தி திட்­ட­மொன்றுக்காக 1.4 பில்­லி­யன் டொலர்­களை வழங்­கு­வ­தற்கு முன்­வந்த ஜப்­பான் அதனை வழங்­கு­வதை தற்­போது இடை­நி­றுத்­தி­யுள்­ளது.

நாடா­ளு­மன்­றத்தை மீண்­டும் கூட்டி எனது பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­ தற்கு அனு­ம­திக்க வேண்­டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து மக்­கள் போராட்­டங்­களை எனது கட்சி விரி­வாக்­க­வுள்­ளது. நாங்­கள் மாற்­று­வ­ழி­கள் குறித்து ஆராய்ந்து வரு­கின்­றோம். பொது­மக்­களை பெரு­ம­ள­வில் அணி திரட்­ட­வுள்­ளோம் -– என்­றார் .  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.