கைதான பாலித மற்றும் ஹேஷா பிணையில் விடுதலை!

மேஜர் அஜித் பிரசன்னவை தாக்கியதாக கோரப்படும் தகவல் தொடர்பில் கைதான பாலித தெவரப்பெரும மற்றும் ஹேஷா விதானகே ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியமையினைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதாவது, மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் கைதான குறித்த இருவரையும் இன்று(05) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
Powered by Blogger.