பாராளுமன்ற பாதுகாப்பிற்கு 1500 பொலிசார் !

பாராளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் இன்று(05) நடைபெறவுள்ள விசேட கூட்டத்தின் காரணமாக விசேட பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.


“…. இந்த கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 1,200 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தியத்தஉயன மற்றும் பொல்துவ உள்ளிட்ட பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு வரும் வாகனங்கள் இன்று(05) நண்பகல் 12.00 மணி தொடக்கம் மட்டுப்படுத்தப்படும்…

கொழும்பு மற்றும் கடுவெல அத்துருக்கிரிய மாலபேக்கிடையில் செல்லும் வாகனங்கள் மாற்று வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை வேன்கள் மற்றும் பஸ்களும் மாற்று வழிகளில் செல்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும். வாகனங்களை கையாள்வதற்காக மாத்திரம் 300 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படும்…” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.