தீபாவளி: பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று தீபாவளி. தீபாவளி என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பட்டாசு தான். குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவர்.


சுற்றுசூழல் மாசுபாடு கருதி இந்தாண்டு உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது. எனவே இந்த 2 மணி நேரத்தில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகள் சில :

►  பெரியோர்கள் இருக்கும்போது தான் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை சேகரித்து மீண்டும் வெடிக்க முயற்சிக்கக்கூடாது.

►  ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்திகளுக்கு அருகே பட்டாசு பொருட்களை வைக்கக் கூடாது. வீட்டுக்குள் கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகளை கொளுத்தக்கூடாது. அதேபோன்று வீட்டில் அடுப்புக்கு அருகில் பாட்டாசுகளை வைக்கக்கூடாது.

►  பட்டாசு வெடிக்கும்போது அருகில் மணல், தண்ணீர் பக்கெட்டுகளையும் வைத்துக் கொள்ள வேண்டும்.  மத்தாப்புகளை கொளுத்தி முடித்த பின்னர் கால்வாயிலோ அல்லது அருகில் வைக்கப்பட்டிருக்கும் பக்கெட் தண்ணீரிலோ போட வேண்டும்.

►  பட்டாசுகளை வெடிக்கும்போது நீண்ட ஊதுவத்தி உபயோகித்து பக்கவாட்டில் பட்டாசை கொளுத்துவது நல்லது. சாக்குகளை ஈரமாக வைத்துக்கொண்டு வெடிக்காத வெடிகள் மீது போட்டு செயல் இழக்க செய்ய  வேண்டும்.

►  பட்டாசுகளை முறையாக தரையில் வைத்து பற்றவைக்க வேண்டும். கையில் வைத்துக்கொண்டே கொளுத்தி வீசி எறிந்து விளையாட கூடாது. பாட்டில் மற்றும் டப்பாக்களில் பட்டாசு வைத்து வெடிக்க கூடாது.



►  முக்கியமாக நாம் பட்டாசு வெடிக்கும் இடங்கள் முக்கியம். முடிந்தவரை திறந்தவெளியில் பட்டாசுகள் வெடிப்பது நல்லது. வீரியம் மிக்க வெடிகளை கண்டிப்பாக, சுற்றி வீடுகள் எதுவும் இல்லாத திறந்தவெளியில் தான் வெடிக்க வேண்டும்.

►  குடிசைகள் நிறைந்த பகுதிகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் மற்றும் முதியோர் இல்லம் இருக்கும் இடங்களில் ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

►  அதிக ஓசையுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.  பாதிப்பை ஏற்படுத்தும்.

►  பட்டாசு வெடிக்கும் போது, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியாமல் இருப்பது நல்லது.

►  ஒருவேளை பட்டாசு வெடித்து ஏதேனும் தீக்காயம் ஏற்பட்டால் உடனே குளிர்ந்த நீரில் கழுவிட்டு அதற்கேற்ற முதலுதவி சிகிச்சைகளை செய்ய வேண்டும். தீக்காயம் சற்று அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த தீபாவளி பாதுகாப்பான தீபாவளியாக இருக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.