மண்சரிவு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆய்வு பணிமனையினால், இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் எல்ல மற்றும் பண்டாரவளை ஆகிய இடங்களுக்கு இடையில் புகையிரத பாதையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக கொழும்பு – பதுளை இரவு நேர புகையிரத சேவை பாதிக்கப்பட்டதுடன், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி நேற்று பயணித்த உடரட்ட மெனிக்கே புகையிரத பண்டாரவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.