கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் 28ஆவது பட்டமளிப்புவிழா!

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலப் பல்கலைக்கழகத்தின் 28ஆவது பொதுபட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஷ கலந்து கொண்டார்.


பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கொத்தலாவலப் பல்கலைக்கழகமானது உலகளாவிய ரீதியில் இராணுவம் மற்றும் சிவில் போன்றவர்களுக்கு தமது மேற்படிப்பை மேற்கொள்ள உகந்த ஓர் பல்கலைக்கழகமாக காணப்படுகின்றது.

இவ்வருட பட்டமளிப்பு விழாவில் 1215 மாணவர்கள் 8 வெவ்வேறு பிரிவுகளில் தமது பட்டமளிப்பை பெற்றுக் கொண்டனர். இரு மருத்துவ பட்டங்கள் 213 உயர்பட்டப்படிப்பு 1000 டிப்ளோமாக்கள் மற்றும் சாதாரண பட்டப்படிப்புக்கள் போன்றவற்றிற்கான பட்டம்வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதிநிலை பாதுகாப்பு அதிகாரி முப்படைத் தளபதிகள் கொத்தலாவலப் பல்கலைக்கழக வேந்தர் , இலங்கை பல்கலைக்கழக உப வேந்தர்கள் பிரதி உப வேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரதி உப வேந்தர் (நிர்வாகம்) (தெற்கு கொத்தலாவலப் பல்கலைக்கழக) பீடாதிபதிகள் நிர்வாக , நிர்வாகமல்லாத கொத்தலாவலப் பல்கலைக்கழக ஊழியர்கள் முப்படையின் உயர்அதிகாரிகள் இராணுவம் , சிவில் பட்டதாரிகள் , அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.