கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளுக்கு பணிப்பாளர்கள் நியமனம்!

கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சாவகச்சேரி தள வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக தகுதி வாய்ந்த பணிப்பாளர்கள் இல்லாதிருந்த குறைபாட்டை நீக்கும் முகமாக மருத்துவ நிர்வாக முதுமாணி பயிற்சியை பெற்றுக்கொண்ட வைத்தியர் த.மஹேந்திரன் மத்திய சுகாதார அமைச்சினால் சாவகச்சேரி தள வைத்தியசாலைக்கு உடனடியாக செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மருத்துவ நிர்வாக முதுமாணி பயிற்சியை பெற்றுக்கொண்ட வைத்தியர் தங்கராஜா காண்டீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர், கிளிநொச்சி பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான நியமனங்கள் உட்பட நாட்டில் உள்ள 17 வைத்தியசாலைகளுக்கான மருத்துவ நிர்வாகத்துறை நியமனங்கள் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் தத்தமது பணியிடங்களில் நாளைய தினம் உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் தற்போதைய பணிப்பாளர் இடமாற்றம் பெற்றுச் செல்ல உள்ளார் எனவும் கடமையேற்கவுள்ள புதிய பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள நியமனம் நிரந்தரமானது எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.