வாழ்வில் ஒளிவீசும் தீபாவளியை அவர்கள் அனுபவிப்பார்கள் – டக்ளஸ்

தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் தீர்க்கப்பட்டதால்தான் அவர்களுடைய வாழ்வில் ஒளிவீசும் தீபாவளியை அவர்கள் அனுபவிப்பார்கள். அதுவரை ஒளிமயமான தீபாவளியை எதிர்பார்க்க முடியாதென மீள்குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மாளிகையில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘தீமைகளை அழித்து வாழ்வில் சமத்துவமான சுபீட்ஷமான வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தீபாவளித் திருநாள் அர்த்தமுள்ளதாக கொண்டாட முடியாத நிலையே காணப்படுகின்றது.

பிரிக்கப்பட முடியாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் கௌரவமான வாழ்வு தொடர்பான அபிலாஷைகள் தீர்க்கப்படாத நிலையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். எங்களின் வாழ்விடங்கள் எங்களுக்கே சொந்தமானவை என்ற அடிப்படையில் எங்களுக்கே கிடைக்கவேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அங்கலாய்ப்புக்களுக்கு உரிய பதில் கிடைக்கவேண்டும்.

அவையெல்லாம் கிடைக்கின்ற பட்சத்திலேயே அர்த்த புஷ்டியான தீபாவளியைத் தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள்.

தற்போது உருவாகியுள்ள புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அதன் நியாயங்களையும் புரிந்து கொண்டு உரிய தீர்வுகளை வழங்கவேண்டும்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.