மனிதர்கள் என்னை ஏமாற்ற தவறுவதே இல்லை-த்ரிஷா!

அவ்னி புலி சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நடிகை த்ரிஷா வருத்தத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


கடந்த 2 வருடங்களாக யவத்மால் பகுதியில் உள்ள மக்களை ஒவ்வொரு நிமிடமும் உயிர் பயத்துடன் வைத்திருந்தது ‘அவ்னி’ எனும் பெண் புலி. கடந்த ஜூன் 2016ம் ஆண்டில் இருந்து, அவ்னி புலி அடித்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில், கடந்த செப்டம்பர் 4ம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவ்னி புலியை கண்டதும் சுட உத்தரவிட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா வனத்துறையினரின் தேடுதல் வேட்டையின் பலனாக, நவம்பர் 2ம் தேதி இரவு 11 மணியளவில், போரதி எனும் கிராமத்தின் அருகே அவ்னி புலி சுட்டுக் கொல்லப்பட்டது. பிரபல துப்பாக்கிச் சுடும் வீரரான ஷஃபத் அலி கானின் மகன் அஸ்கர் அலி கான், இந்த புலியை சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்ட அவ்னிக்கு பிறந்து 10 மாதமேயான 2 குட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புலியை கொல்ல முன்பு இருந்தே பல விலங்குகள் நல ஆர்வளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது அவ்னி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள த்ரிஷா, "மனிதர்கள் தன்னை எப்போதும் ஏமாற்றத் தவறியதே இல்லை" என்று கூறியுள்ளார்.  அவ்னி புலி கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை சதா, "இது ஒரு உயிரினத்திற்கே எதிரானது" என்று கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.