விஜய் இரசிகர்கள் மீது பொலிஸ் தடியடி

சர்கார் படத்தின் டிக்கெட் வாங்குவதற்காகச் சென்ற விஜய் இரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை, கூடுவாஞ்சேரியில் உள்ள வெங்கடேஷ்வரா திரையரங்கில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இன்று (திங்கட்கிழமை) பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

தீபாவளியையொட்டி நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் நாளை உலகம் முழுவதிலும் வெளியிடப்படுகின்றது.

இந்நிலையில் இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று இடம்பெற்றதுடன், டிக்கெட் எடுப்பதற்காக விஜய் இரசிகர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலை முதலே திரையரங்கின் முன்பு குவிந்தனர்.

இதனால் இரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், மேலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் உருவானது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், திரையரங்கில் சிறிது நேரம் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.