மைத்திரியின், மற்றுமொரு நரித்தனம்.!

மகிந்த ராஜபக்சவை கடந்த 26 ஆம் திகதி பிரதமராக நியமித்த 2 வாரங்களுக்கு முன்னர், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியிட ஐக்கிய

தேசியக்கட்சி வாய்ப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியின் பிரதிநிதிகளான லசந்த அழகியவண்ண மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துக்கொண்டிருந்துடன் ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த தயாரில்லை என கூறியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை நடந்து 2 வாரங்கள் செல்லும் முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமித்துள்ளதாக பேசப்படுகிறது.

எவ்வாறாயினும் தமது கட்சி மற்றும் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுத்துள்ள தீர்மானம் காரணமாக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #mahinda  #maithiri

No comments

Powered by Blogger.