கமலுக்கு கடாரம் கொண்டானுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம்

சாமி ஸ்கொயர்' ரிலீசுக்கு பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘கடாரம் கொண்டான்’ என்று தலைப்பு வைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு வெளியானது.
விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை மிரளவைத்தது. தற்போது கடாரம் கொண்டான் படக்குழுவினருடன் சேர்ந்து கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 
Powered by Blogger.