பாராளுமன்றத்தில் 14 ஆம் திகதி ஐ.தே.முன்னணிக்கு 85 பேர் மட்டும், ரிஷாட், ஹக்கீம் மக்கத்தில்!

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளினதும் சகல உறுப்பினர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதியே மக்காவிலிருந்து நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இரு கட்சிகளிலுமுள்ள 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சித் தலைவர்கள் சகிதம் கடந்த 7 ஆம் திகதி புனித மக்காவுக்கு சென்றுள்ளனர்.

இதனால், எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டும் போது ஐக்கிய தேசிய முன்னணிக்கு பாராளுமன்றத்தில் 85 உறுப்பினர்களே இருப்பதாகவும் இன்றைய தேசிய சகோதார நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையில் இந்த இரு கட்சிகளினதும் ஆதரவு முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது  
Powered by Blogger.