கிராமத்துக் குயிலின் பாடலைப் பாராட்டிய ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலைப் பாடிய ஏழைப் பெண் ஒருவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு தேடிவந்திருக்கிறது.


ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியை சேர்ந்தவர் பேபி. கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் என பாடி ஊரில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அவர் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த பாடலை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இனிமையான குரலில் பாடும் அந்தப் பெண்ணுக்காக அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

இதனை ஏ.ஆர். ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த தெலுங்கு பட இசையமைப்பாளர் கோடேஸ்வர ராவ், பேபிக்கு தான் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக அறிவித்துள்ளார்.

Powered by Blogger.