பிரதமர் வேட்பாளர் விடயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்

ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் விடயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அரசியலமைப்பிற்கு எதிராக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை ஒருபோதும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எனவே மீண்டும் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படவேண்டும். ஆனால் தற்போது ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் சிலர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், எந்தவித உரிய காரணங்களுமன்றி தற்போது பிரதமர் பதவிலிருந்து ரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புக்கு முரணாக பதவி நீக்கப்பட்ட அவரே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


#Tamil   #Tamilnews  #Srilanka   #Jaffna  #Tamilarul.net   #News #sajeth piramathasa
Powered by Blogger.