ஒரு வினாடி எனக்கு கிடைத்தாலும் அதனை எனது மக்களுடைய நலன்களுக்கா பயன்படுத்துவேன்-யாழில் டக்ளஸ் தேவானந்தா

ஒரு வினாடி எனக்கு கிடைத்தாலும் அதனை எனது மக்களுடைய நலன்களுக்காகவும், அவர்களுடைய நன்மைகளுக்கும், பாதுகாப்புக்கும் பயன்படுத்துவேன். மாறாக எனது சுயநலன்களுக்காக பயன்படுத்தமாட்டேன்.

இந்த அரசாங்கம் தொடரும், எமது சேவை நீடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.அமைச்சரவை தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் நேற்று யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட செயலகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலத்திலும், இப்போதும் எனக்கு அரசியல் பலம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால் விரலுக்கு ஏற்ப வீக்கம் என்பதுபோல் முடிந்தவற்றை செய்தேன். ஆனால் அதனை மக்கள் இன்று உணர தொடங்கியுள்ளதாக நான் அறிகிறேன்.

வருங்காலத்தில் மக்கள் என்னை பலப்படுத்துவார்கள் என நான் நம்புகிறேன். அதனால் கூடியளவான விடயங்களை செய்யலாம். ஒரு மனிதனுக்கு உணவும் தேவை, சுவாசிக்க காற்றும் தேவை. உணவு தேவை என்பதற்காக சுவாசிக்கும் காற்றையோ, காற்று தேவை என்பதற்காக உணவையோ கைவிட முடியாது. அதேபோல் அரசியல் உரிமைகள் தேவை அதேபோல் அபிவிருத்தியும் தேவை. சூழலுக்கேற்ப நாங்கள் அதனை முன்னெடுத்து செல்வோம்.

இன்று வழங்கப்படும் நஸ்டஈட்டை பொறுத்தளவில் அதனை விரைவுபடுத்தி கொண்டுவருகிறோம். இதேபோல் நஸ்டஈடு தொடர்பான தேவைகள் அதிகம் உள்ளது. விண்ணப்பங்கள் அதிகம் உள்ளது. அவற்றையும் விரைவுபடுத்தி செய்வோம்.

மேலும் இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை எனவும், இலங்கையில் மற்றய இடங்களில் கொடுக்கப்பட்ட தொகைக்கும் இந்த தொகைக்கும் இடையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளதாக கூறப்படுகிறது என தெரிவித்தார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Dougles #jaffna 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.