இலங்கை அரசியல், கடும் அதிர்ப்தியில் ஐரோப்பிய ஒன்றியம்!

கடந்த மாதம் 26ஆம் திகதி தொடக்கம் நாட்டில் குழப்பகரமான நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அரசியலை இன்று சர்வதேசமே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது.


இலங்கை நான்கு பக்கமும் கடலினால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவுதான். ஆனால் அனைவரது கவனமும் இன்று இலங்கை மீது தான் இருக்கின்றது. 19 நாட்களில் இலங்கை அரசியலே ஒரு புறம் தடம் புரண்டு விட்டது.

கடந்த 26 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த அமரவீர நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியாகி சிறு மணிநேரத்தில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மகிந்தவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.

இதன் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் 16ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக புதிய அரசாங்கம் அறிவித்திருந்தது. தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொணடனர்.

குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், வியாழேந்திரன் உட்பட்டவர்கள் கட்சி தாவியிருந்தனர். இதன் காரணமாக 113 என்ற பெரும்பானமையை நிரூபிக்க இரு கட்சிகளும் பல முயற்சிகளை எடுத்திருந்தது.

புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டவர்களையும் இணைத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என நியமனம் வழங்கப்பட்டது.

அதனை அடுத்து இம் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதாக விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தார்.

இதன் பின்னர் விசேட உயிரையாற்றிய ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினை, சபாநாயகரின் ஓர் கட்சி சார்ந்த நடவடிக்கை ரணில் விக்கிரமசிங்கவின் செயப்பாடுகள் காரணமாகவே நாடாளுமன்றத்தை கலைத்ததாக பகிரங்கமாக கூறியினார்.

அது மட்டும் இன்று கொழும்பில் கொழும்பில் நடைபெற்ற பேரணியில் மைத்திரி உரையாற்றும் போது ரணிலை எதிர்க்க பலம் வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார் அதனால் அந்த இடத்திற்கு மகிந்தவை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

இவ்வாறு பிரச்சாரங்களும் போராட்டங்களும் ஒரு புறம் கொழும்பை பதற வைத்திருந்தது. இதனை தொடர்ந்து உயர் நீதிமன்றில் 12 அடைப்படை உரிமை மீறல் மனுக்களும், 5 ஆட்சேபனை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி இரு நாட்கள் விசாரணையின் பின்னர் நேற்று நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு 17 ஆம் திகதி வரை இடைக்கல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் ஜனாதிபதி ஏற்கனவே விடுத்த வர்த்தமானி அறிவித்தலில் பிரகாரம் நாடாளுமன்றம் இன்று கூட்டப்பட்டு, பிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை 122 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து மஹிந்த தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இறுதி தீர்மானத்தை ஜனாதிபதியே எடுப்பர் எனவும் கூறிவந்தனர். இருப்பினும் இன்று மதியம் குறித்த பிரேரணை முடிவு தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்.

குறித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாளை சபாநாயகர் உட்பட கட்சி தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாளை முக்கிய அறிவிப்பையும் மஹிந்த ராஜபக்ச விடுக்கவுள்ளதாக கூறியுள்ளனர். இலங்கையில் மைத்திரியின் இந்த அதிரடி நடவடிக்கையால் சுவிட்சர்லாந்து , அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென இலங்கையை வலியுறுத்தி வருகின்றது.

அது மட்டும் இன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அவரது குடும்பத்தினர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்விவகாரங்கள் தொடர்பான ஆணைக்குழுவின் விசேட பேச்சுவார்த்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றும் வெளியாகியதாக கூறப்பட்டது. நாளை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழ ஆரம்பித்துள்ளது.
#Mahinda #Maithripala Sirisena #European Union  #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #இலங்கை #யாழ்ப்பாணம் #வடமாகாணம்

No comments

Powered by Blogger.