வரவைத் தேடும் அழகு ஈழம்

புறப்பட்ட புலி வீரம்
புகழாரம் கேட்டதில்லை 
இனம் காக்க எழுந்த வீரம்
இழப்பை கண்டு இடிந்ததில்லை!

இறுதி மூச்சு முட்டும்போதும்
இழைப்பாற எண்ணியதில்லை
இழந்த வீரர் என்றும் இறக்கவில்லை- ஈழம்
பிறக்கும் ஈழச்சிசுக்களெல்லாம் - நாம்
விதைத்த மாவீரர் மறுபிறவிகளே!
தமயன் அவன் தலையசைவில்
தனியழகாய் தழைத்த ஈழம் - இன்று
தந்திரத்தால் அழகவிழ்ந்து அந்தரத்தில்
தலைவன் இல்லா அழுகிறது!
சுட்டு விரல் அசைவு கண்டு
எட்டி தெறித்த எதிரியவன்- இன்று
சந்திக்கொரு காவல் போட்டு
எம்மினத்தை ஆழுகின்றான்!
கயவனவன் கதைமுடிக்க
வந்திடுவீர் எங்கள் அண்ணா
ஆட்டம் காட்டும் அரக்கர் கூட்டம்
உங்கள் வரவறிந்தால் வந்தவழி ஓட்டம் காணும்!
தீர்வு ஒன்றில் ஈழம் மலரும் - என்ற
எண்ணத்துளியும் சிதறிப் போச்சு
காத்திருந்து காத்திருந்து
காலங்களும் நரைத்துப் போச்சு !
இடையில் வந்த இனவெறியன்
ஓடும் காலம் தூரமில்லை - நாம்
ஆழப் பிறந்த அழகு ஈழம்
அண்ணன் வரவிற்காக ஏக்கத்தோடு!
-ஜெயவவா அன்பு
Powered by Blogger.