யாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை! கடல் நீர் உட்புகும் அபாயம்

கஜா சூறாவளியானது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில், வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, யாழ்ப்பாண குடாநாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 80 முதல் 90 கிலோமீற்றராக அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், 150 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பிரதேசத்தில் கடற்தொழில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் மேலும்
தெரிவித்துள்ளார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Jaffna #Kaja #Mohamad Saleheen  #இலங்கை #யாழ்ப்பாணம் #வடமாகாணம்
Powered by Blogger.