யாழில் மாணவனுக்கு சிறை

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.இதன்படி குறித்த தண்டனைக்காக மாணவனை சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ். நகர்ப் பகுதியில் 18 வயதுடைய மாணவன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடமிருந்து 10 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது, மாணவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் ஒரு மாதகால சிறைத் தண்டனைக்காக, மாணவனை அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பித்து தண்டனைக் காலத்தைக் கழிக்க நீதிவான் அனுமதியளித்தார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Student #இலங்கை #யாழ்ப்பாணம் #வடமாகாணம்
Powered by Blogger.