‘கஜா’ புயலினால் கிளிநொச்சிக்கு பாதிப்பில்லையாம்

வடக்கு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ‘கஜா’ புயலினால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பாரிய பாதிப்புகள் இல்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”கஜா புயல் தாக்கம் குறித்து கடலோரம் மற்றும் ஏனைய மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், தெய்வாதீனமாக எதிர்பார்த்த அளவிற்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை. எதிர்பாராத வகையில் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கும் நாம் தயார் நிலையில் உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Nayagam #Kilinochchi  #Kaya
Powered by Blogger.