நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குரியாகியுள்ளது-சரவணபவன்

மட்டக்களப்பு நகரில் 5.7 மில்லியன் ரூபாய் செலவில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.நாட்டின் ஜனநாயகம் குறித்த சந்தேகம் எழுந்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

அதன்போது நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எப்போதும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் நடப்பதை உறுதிப்படுத்தினால் நாடாளுமன்றம் மிகவும் அமைதியாகவும், கௌரவமாகவும் நடைபெறும்.

இதனை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் மனதில் நிறுத்தி எமது நாடு ஜனநாயக நாடு என்பதை உலகுக்குத் தெரியப்படுத்துவதற்கு தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை பார்க்கின்ற போது இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா? மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஜனநாயக முறையில் நடந்து கொள்கின்றார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.எனவே, இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியாயமான, ஜனநாயக முறையில் செயற்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Saravanabavan #Batticola

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.