கேரள முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் தோல்வி

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை
நாளை திறக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், முந்தைய தீர்ப்பு தற்போது அமலில் இருப்பதால் அதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.இதில் காங்கிரஸ், பாஜக, முஸ்லிம் லீக் உள்ளட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது சபரிமலை கோயில் பாரம்பரியத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். பினராயி விஜயன் இதனை ஏற்க மறுத்ததால் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், பா.ஜ.க வெளிநடப்பு செய்தனர்.


சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சமரச திட்டம் பற்றி யோசனை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சபரிமலையில் அனைத்து பெண்களை தனியே அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து புதிய சமரச திட்டம் பற்றி யோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மாநில அரசு நிறைவேற்றுவதாக கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.