ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள் நிகழ்வு

ஆண்மொழியின் கட்டுடைப்பு என்ற நிகழ்வுக்கு வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார் ...
பாலிழிவு :
வேத மரபு செவ்வியல் மரபு வாய்மொழி மரபு -மாலதி மைத்ரி
பழமொழிகளும் பெண்களும் ஞானவள்ளி -யின் கட்டுரையை பெவர்லி கிங்ஸிலி வாசித்தார்
பெண்கள் மீதான பாலியல் பலாத்தாரங்களை சமூகத்தின தற்செயல் விபத்தாக நாம் கடக்க பழக்கிவிட்ட போதும் சில சம்பவங்கள் அதன் கொடூரத்தைப் பொருத்தும் சமூக சாதி அந்தஸ்த்தை பொருத்தும் நாடு தழுவிய மாநிலம் தழுவிய பொது விவாதங்களை போராட்டங்களை கிளப்பிவிட்டு அடங்கும். அச்சமயத்தில் மட்டும் தன்வீட்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சப்படும் இக்கொடுமைகளுக்கு நீதிக் கேட்டு எழும் எல்லா ஆண்களும் மொழியில் பெண்களை குற்றவுணர்வற்று தன்மானமற்று தினம் தினம் ரேப் செய்யும் நடத்தையியலை குறித்து சுயவிசாரணை சுயமதிப்பீட்டுக்கு உட்படுத்திக் கொள்வதில்லை. பொதுவாக பெண்களும் இவை ஆணின் ரசிக்கத்தக்க இயல்பெனக் கடக்க பழகுகிறோம் அல்லது சுட்டிக்காட்டாமல் தவிர்த்து “குட் கேர்ள்” பிம்பத்தை காக்க அவர்களின் வசனத்துக்கு முன்னேயே சிரிக்கக் கைகுலுக்க பழகுகிறோம்
ஆண் மொழியின் கட்டுடைப்பு

Powered by Blogger.