பாராளுமன்ற தேர்தலை யாராலும் நிறுத்த முடியாது!

பாராளுமன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் அறிவிக்கபப்ட்டுள்ள நிலையில், அதனை ஒருபோதும் யாராலும் நிறுத்த முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ‘இந்தியா டுடே’ எனும் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளளார்.


அவ்வாறே, இலங்கையின் நிலை தொடர்பில் சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

“ சர்வதேச சமூகம் இதை ஒரு ஜனநாயகமாக பார்க்க வேண்டும். நாம் மக்கள் மத்தியில் செல்வோம்.. அவர்களது விருப்பத்தினை நாம் பெறுவோம். நாம் சர்வதேசத்தினையும் சந்திப்போம். அவர்கள் எமது நிலைப்பாட்டினை புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஏலவே அவற்றை செய்துள்ளோம். ஜனாதிபதி அவர்களுடன் உரையாற்றி உள்ளார். நானும் அவர்களை சந்திப்பேன். நான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தேன். அவர் எனது நிலைப்பாட்டினை ஏற்றுக் கொண்டார்.. 19ம் அரசியலமைப்பு சீர்திருத்தம் என்றால் என்ன? நீங்கள் ஏனைய அரசியல் அமைப்புக்களையும் வாசிக்க வேண்டும்.. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு தேர்தலை நடாத்த உரிமை உண்டு.. அது ஜனநாயக விரோத செயல் இல்லை. ”
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Mahinda #India-Today #மஹிந்த #ராஜபக்ஷ ‘#இந்தியா #டுடே’

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.