மைத்திரி – மஹிந்த, புதிய கூட்டணிக்கு இணக்கம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ‘நிதஹாஸ் பொதுஜன பெரமுன’ என்ற புதிய கூட்டணியை அமைத்து இணைந்து போட்டியிடுவதற்கு ஜனாதிபதி
சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று(12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தமிழ் அருள் இணையம் அறிந்துள்ளது..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளியேறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து வருகின்ற ஒரு சூழ்நிலையில் குறித்த இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘நிதஹாஸ் பொதுஜன பெரமுன’ என  கூட்டணிக்கு பெயரிடப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனினும் இந்த யோசனையை இரு தலைவர்களும் இன்னமும் தங்கள் கட்சிகளின் சிரேஸ்ட தலைவர்களிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் சிலர் கட்சியின் பெயரின் கீழ் போட்டியிட வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Mahinda  #sirisena #New #Nithakaas-Pothujana-Peramuna

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.