‘மனோ’ மைத்திரியின் அழைப்பினை நிராகரிப்பு!

தான் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.


அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இது குறித்த பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “.. நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது நேரடியாக கூறி விட்டோம்..”
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Mano 
Powered by Blogger.