முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைவரான, முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Nalaka # நாலக டி சில்வா 

No comments

Powered by Blogger.