பாராளமன்றத்தில் போர் மூண்டது

நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியுள்ளது. தற்போது நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். அவர் அங்கு தெரிவிப்பதாவது, நான் சிறு வயது முதல் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கின்றேன். அமைச்சுப் பதவிக்காகவோ, பிரதமர் பதவிக்காகவோ நான் சபைக்கு வரவில்லை. இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் தெரிவிக்கின்றார்.


அத்துடன் சபாநாயகரை சுற்றி ஒன்றிணைந்த எதிரணியினர் முற்றுகையிட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பெயர்கூறி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

நாடாளுமன்றம் நேற்று கூடியபோது கூச்சலிடையே இந்த பிரேரணை நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

எனினும் இதற்கு மஹிந்தவாதிகள் எதிர்ப்பு வெளியிட்டதோடு ஜனாதிபதியும் இது நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு முரண் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இன்றைய தினம் கூடிய நாடாளுமன்றத்தில் பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்பிப்பதாகவும், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல யோசனை முன்வைத்தார்.

இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து சபையில் மஹிந்தவாதிகள் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

சபாநாயகருடன் பெரும் வாக்குவாதத்துடன் ஈடுபட்டதோடு அவருடைய ஆசனத்திற்கு அருகில் சென்று அச்சுறுத்தினர்.

இதனால் நாடாளுமன்றம் பெரும் போர்க் களமாக மாறியதோடு உறுப்பினர்களுக்கு இடையில் சண்டைகளும் ஏற்பட்டன.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Parliament 
Powered by Blogger.