உந்துருளியில் கஞ்சா கடத்தியவர் -பொலிஸாரிடம் சிக்கினார்!

வட­ம­ராட்சி, பருத்­தித்­து­றை­யில் நேற்று 4 கிலோ 200 கிராம் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

உந்­து­ரு­ளி­யில்கடத்­திச் செல்­லப்­பட்­ட­போதே கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று காங்­கே­சன்­து­றைக் குற்­றத்­த­டுப்­புப் பிரி­வுப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.


காங்­கே­சன்­துறை சிறப்­புக் குற்­றத்­த­டுப்­புப் பிரி­வுப் பொலி­ஸா­ருக்கு கஞ்சா கடத்­தப்­ப­டு­வது தொடர்­பில் இர­க­சி­யத் தக­வல் கிடைத்­துள்­ளது.

அதை­ய­டுத்து காங்­கே­சன்­துறை மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் புத்தி உடு­கம சூரி­ய­வின் தலை­மை­யி­லான பொலிஸ் குழு பருத்­தித்­துறை குடத்­தனை, பொற்­ப­தி­யில் சோதனை நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யது.

அந்­தப் பகு­தி­யில் பய­ணித்த உந்­து­ருளி மடக்­கிச் சோத­னை­யி­டப்­பட்­டது. பொதி செய்­யப்­பட்ட நிலை­யில் அதி­லி­ருந்து 4 கிலோ 200 கிராம் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது. உந்­து­ரு­ளி­யைச் செலுத்தி வந்­த­வர் கைது செய்­யப்­பட்­டார்.

கைது செய்­யப்­பட்­ட­வர் பருத்­தித்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார். உந்­து­ரு­ளி­யும் பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

கஞ்சா விற்­ப­னைக்­கா­கக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Point Pedro

No comments

Powered by Blogger.