கட்சி தாவினார் மனுஷ நாணயக்கார!

மகிந்த ராஜ­பக்ச அர­சில் அண்­மை­யில் பிரதி அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­றி­ருந்த ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மனுஷ நாண­ யக்­கார நேற்­றுத் தனது அமைச்சுப் பத­வி­யில் இருந்து வில­கி­யுள்­ளார். மீண்­டும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பக்­கம் தாவி­யுள்­ளார்.


கூட்­ட­ர­சில் இருந்து விலகி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், மகிந்த ராஜ­பக்­ச­வும் இணைந்து அமைத்த அர­சில் மனுஷ நாண­யக்­கார தொழில் மற்­றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புப் பிரதி அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­றி­ருந்­தார்.

ஐக்­கிய தேசி­யக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மனுஷ கட்சி தாவியே இந்­தப் பத­வி­யைப் பெற்­றுக் கொண்­டார்.

நேற்று அவர் திடீ­ரெ­னத் தனது பத­வி­யில்  இருந்து வில­கு­கின்­றேன் என்று அரச தலை­வ­ருக்­குக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். அதன்­பின்­னர் அலரி மாளிகை சென்ற அவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைச் சந்­தித்து ஆத­ரவு தெரி­வித்­துள்­ளார்.

பத­விப் பிர­மா­ணம் செய்­து­கொண்ட புதிய அரசை நாடு­கள் எவை­யும் ஏற்­றுக் கொள்­ள­வில்லை. எனது ஜன­நா­யக – அர­சி­யல் நம்­பிக்­கை­கள் மற்­றும் மனச் சாட்­சி­யின் அடிப்­ப­டை­யில் எனது பதவி வில­க­லைச் சமர்ப்­பிக்­கின்­றேன் என்று மனுஷ அரச தலை­வ­ருக்கு அனுப்­பிய பதவி வில­கல் கடித்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி தேர்­த­லில் உங்­க­ளுக்­குக் கிடைத்த ஆணை­யை­யும், அதன்­பின்­னர் கூட்டு அரசு உரு­வாக்­கப்­பட்­ட­தும் அதி­கார வர­முறை மீறல்­க­ளை­யும், ஜன­நா­யக விரோ­தச் செயற்­பா­டு­களை ஒழிப்­ப­தற்கே என்­பதை நான் உங்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்­றேன்.

இன்று முதல் நான் சபா­நா­ய­க­ரின் நிலைப்­பாட்டை ஏற்று தலைமை அமைச்­ச­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே ஏற்­பேன் என்­றும் அவர் அரச தலை­வ­ருக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

மகிந்த ராஜ­பக்­சவை நீங்­கள் தலைமை அமைச்­ச­ராக நிய­மித்து நாடா­ளு­மன்ற அமர்­வு­களை இடை­நி­றுத்­தி­ய­தைத் தொடர்ந்து கடந்த சில நாள்­கள் குழப்­பம் மிக்­க­வை­யா­கக் காணப்­ப­டு­கின்­றன.

நான் உங்­க­ளு­டன் பேச்சு நடத்­தி­னேன். நீங்­கள் கூறி­ய­வற்றை ஏற்­றுக் கொண்டு புதிய அர­சில் பிரதி அமைச்­ச­ரா­கப் பணி­யாற்­றும் அர­சி­யல் முடிவை எடுத்­தேன் என்­றும் மனுஷ தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

உங்­க­ளின் நட­வ­டிக்­கை­யால் ஏற்­ப­டக் கூடிய பார­தூ­ர­மான விளை­வு­க­ளைத் தெளி­வு­ப­டுத்தி சபா­நா­ய­கர் விடுத்­துள்ள அறிக்­கையை வாசிக்க நேர்ந்­தது. பத­விப் பிர­மா­ணம் செய்து கொண்ட புதிய அரசை எந்த நாடு­க­ளும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

இது எனது ஜன­நா­யக மனச்­சாட்­சியை ஆழ­மா­கச் சிந்­திக்­கத் தூண்­டி­யது. நான் எனது அர­சி­யல் சகாக்­கள் மற்­றும் ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் தீவிர ஆலோ­ச­னையை மேற்­கொண்­டேன்.

அர­ச­மைப்­புக்கு முர­ணான நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் துணை போகக் கூடாது என்று முடி­வுக்கு வந்­துள்­ளேன் என்­றும் அவர் தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.