அவசரமாக சந்திக்கிறார்கள் ரணிலும் மஹிந்தவும்!

நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணுமுகமாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக இன்று காலை பத்து மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கான பிரதமர் ஆசனம் மறுக்கப்பட்டதுடன் நேற்றைய தினம் அவருக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால் அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ளமுடியாதென சபா நாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சபையில் பெரும் கூச்சல் குழப்பம் இடம்பெற்றுள்ளதுடன் மஹிந்த ராஜபக்‌ஷ தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்பின்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினைச் சமர்ப்பிப்பதாகவும் அதன்மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறினார்.

இதனையடுத்து மஹிந்த சார்பானவர்கள் கடும் குழப்பம் விளைவித்ததோடு சபாநாயகர் ஆசனத்தை நோக்கி நகர்ந்து குழப்பத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் சபையிலிருந்து வெளியேறிய சபா நாயகர் கட்சித் தலைவர்களுடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை 21ஆம் நாள்வரை ஒத்திவைப்பதென்ற முடிவு எட்டப்பட்டது.

இதன் பின்னரான தற்போதைய நிலையிலேயே மஹிந்தவும் ரணில் விக்கிரமசிங்கவும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

#Tamilnews #Ranil #Maithiripala Sirisena  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #இலங்கை #யாழ்ப்பாணம் #வடமாகாணம்

No comments

Powered by Blogger.