மக்கள் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார் ரணில்!

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும்வரை போராட வருமாறு பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் கூடியிருந்த
பல்லாணிரக்கணக்கானமக்கள் முன்னிலையில் அழைப்பு விடுத்தார்.

தலைநகர் கொழும்பில் மாத்திரமன்றி நாட்டின் அனைத்துபகுதிகளிலும் போராட்டங்களை நடத்தி மக்களின் பலத்தை காண்பிக்குமாறும் நாட்டு மக்களிடம்ரணில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்திற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியால் தொடர்ச்சியாகவிடுக்கப்பட்டுவரும் சவால்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி ஏற்பாடுசெய்திருந்தபோராட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்றது.இதில் பிரதான உரையை ஆற்றிய ரணில் விக்கிரமசிங்க, : சிறிசேன– ராஜபக்ச கும்பலுக்கு அதிகாரம் இல்லை” என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க,தேவைப்படின் மறுபடியும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து ஐக்கியதேசியக் கட்சியின் பலத்தை நிரூபித்துக் காண்பிக்க தயார் என்றும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் முதலில் நடத்துவது ஜனாதிபதித் தேர்தலைநடத்துவதா, பொதுத் தேர்தலை நடத்துவதா என்பது குறித்து கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி தயார் என்றும்தெரிவித்தார். அதேவேளை அரசியல் சாசனத்திற்கும், ஜனநாயகத்திற்கும்மதிப்பளித்து நடத்தப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் முகம்கொடுக்க ஐக்கிய தேசியக்கட்சி தயார் என்றும் ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Ranil #Meeting#Tamilarul.net  #இலங்கை #யாழ்ப்பாணம் #வடமாகாணம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.