விடுதலைப் புலிகள் காலத்தில் இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இரு தடவைகள், தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் என அரசியல் யாப்புக்கு உட்பட்ட பிரதமர் என கூறப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை நிராகரித்த ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜெயசூரியவை கட்சிதலைவர்கள் சந்தித்தவேளை எவரும் இது குறித்து தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.இரத்தக்களறியேற்படும் ஆபத்துள்ளது என அவர்கள் கருதியிருந்தால் சபாநாயகரை சந்தித்தவேளை இது குறித்து அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வன்முறைகள் நிகழும் சூழ்நிலை காணப்பட்டிருந்தால் அது தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டியது சபாநாயகரே என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க எனினும் ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட்டு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பாராளுமன்றத்தை கலைத்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த சிறிசேனவின் கருத்தினை, ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் நிராகரித்து இன்று விடுத்துள்ள அறிக்கையில்,பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் அவர்களிற்கான விலைகள் குறித்து சிறிசேனவிற்கே தெரிந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க சிறிசேனவின் கட்சியே ஐக்கியதேசிய கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களிற்கு அமைச்சு பதவிகளை வழங்கியது எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மீதும் பாராளுமன்றத்தின் மீதும் நம்பிக்கை இழந்தார்கள்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மக்களிடமிருந்து பெற்ற ஆணையை மதிப்பதற்காக நான் கடந்த மூன்றரை வருடங்கள் மிகவும் பொறுமையாகயிருந்தேன் என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க நான் அவமானங்களையும் ஏளனங்களையும் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டேன் எனினும் நான் பொறுமையாகயிருந்தன் காரணமாகவே மூன்றரை வருடங்கள் இந்த அரசாங்கத்தை தொடரமுடிந்தது” எனவும் தெரிவித்துள்ளார்.

“நான் எனது தனிப்பட்ட நலன்களை அரசியல் நலன்களில் இருந்து பிரித்துப்பார்த்தே வந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க, தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் சபாநாயகர் பாராளுமன்றத்தின் பாரம்பரியத்தை பின்பற்றினார் எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Ranil #LTTE #ரணில் விக்கிரமசிங்க #தமிழீழ விடுதலைப்புலிகள் #சிறிசேன

No comments

Powered by Blogger.