எமது தேசத்தில் மாவீரர்களின் தியாகங்களை மதிப்பளித்து பணியாற்றுவோம்

இலங்கைத்தீவிலே தமிழர்கள் பலமாக இருந்தால்தான் இந்திய தேசத்தின் தேசிய பாதுகாப்பிற்கு பலமாக
இருந்திருக்கும். இதனை விளங்கிகொண்டு தாங்கள் தவறு இழைத்து விட்டோம் என இந்திய தேசம் சிந்திக்க வேண்டிய காலம் இந்த காலம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கரடியனாறு கொடுவாமடு பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் தி.யகேந்திரன் தலைமையில் நேற்று(சனிக்கிழமை) கொடுவாமடு கிராம அபிவிருத்திசி சங்க கட்டிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“எல்லாரும் நினைத்தார்கள் 2009 மே 18 உடன் போராட்டம் முடிந்தது தமிழ் மக்களின் இலட்சிய பாதை முடிந்தது என கனவு கண்டார்கள். ஆனால் அது தலைகீழாக மாறி இன்று வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவீர் துயிலும் இல்லங்களும் மக்களினால் துப்பரவாக்கப்பட்டு எழுச்சி பெற்றிருக்கின்றது.
இந்த மக்களின் தியாகம் என்பது யாராலும் ஈடுசெய்ய முடியாது. அவர்களது இலட்சியம் என்பது மிகவும் உயர்ந்தது அவர்களது இலட்சியத்தை   நிறைவேற்ற வேண்டிய பொறுப்புடையவர்ளாக நாங்கள் அனைவரும் இருக்கின்றோம்.
இன்று இந்த நாடாளுமன்றம் படும் பாட்டை பார்த்தால் உலகத்திற்கே தெரியும் பதவிக்காக தங்களுக்குள்ளே அடிபடுகின்றார்கள் என்று“ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.