கூத்தமைப்பை தோலுரித்த - த.தவரூபன்!

-த.தவரூபன்-
  1. கண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, 
  2. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, 
  3. கைகள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கி சுட்டுக் கொல்லப்பட்ட போது,
  4. மக்கள் கண் முன் பார்த்திருக்க விடுவிக்கப்படாத காணிகளில் வீடுகள் இராணுவத்தால் இடித்தழிக்கப்படும் போது,
  5. மரணித்தவர் புதை குழிகளை டாங்கிகளை கொண்டு சிதைத்த போது,
  6. விசாரணைகளே இன்றி பல வருடங்கள் சிறையில் கைதிகள் வைக்கப்பட்ட போது,  
  7. பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின் பல வருடங்களின் பின் தொடர் சித்திரவதைகள் உள்ளாக்கப்பட்டு நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்ட போது,
  8. 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறை வேற்ற தயங்கிய போது, 
  9. வடக்கு கிழக்கை பிரித்த போது,
  10. முதலமைச்சர் நிதியத்தை தடுத்தபோது,
  11. மொழியுரிமைகள் மீறப்பட்ட போது,
  12. வழிபாட்டுத் தலங்கள் தொல்பொருள் திணைக்களத்தால் கபளீகரம் செய்யப்பட்ட போது ,
  13. திட்டமிட்ட குடியேற்றங்கள் செய்யப்பட்ட போது,
  14. கன்னியா கிணறுகள் சிங்களமயமாக்கப்பட்ட போது,
  15. மனிதாபிமான போர் என்று சொல்லி கொத்துக் குண்டு போட்டு பல்லாயிரம் மக்களை அழித்த போது,
  16. வைத்தியசாலைகள், வழிபாட்டிடங்கள் மீது குண்டு வீசி மக்களை கொன்ற போது,
  17. செம்மணியில் இன்னும் புதைகுழிகளில் மக்களை கொன்று புதைத்த போது
  18. இப்படி எண்ணுக்கணக்கற்ற விடயங்களில் ஆதாரங்கள் சாட்சிகள் எல்லாம் இருந்தும் 
  19. இலங்கையின் யாப்பின் படி மீறப்பட்ட விடயங்களாக இருந்த போதும் 
  20. ஜனநாயக மறுப்புக்காகவோ, மனித உரிமை மீறலுக்காகவோ
  21. இந்த சுமந்திரனும் சம்பந்தனும் ஏன் ஜனநாயகம் மனித உரிமைகள் பற்றி கதறும் மற்றவர்களும் கோட்டுக்கு ஒரேயடியாக பாய்ந்து வழக்கு போடவில்லை? 
  22. அப்போது எல்லாம் உச்ச நீதிமன்றத்துக்கு பாதை தெரியாமல் கிடந்தார்களா? மனித உரிமைகள் ஜனநாயகம் குறித்த சட்டத்தின் சரத்துக்கள் அழிந்து போயிருந்தனவா?
  23. சட்டத்தில் நீதியில் நம்பிக்கை இல்லாவிட்டn லும் ஒப்புக்கேனும் போட்டு உலகத்தை திருப்பியிருக்க வேண்டாமா? உச்ச நீதிமன்றை உலுக்கியிருக்க கூடாதா?


இப்ப மட்டும் கட்சி ரீதியாக தனிப்பட என முந்தி முந்தி பல்வேறு வழக்கு போடுகின்றார்கள்?

மக்களின் அவலங்களில் வாக்கு கேட்டு வென்ற பிரதிநிதிகள் தனித்தனியாக ஒரே நாளில் வழக்கு போட்டு இருக்கலாம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் ஒப்பிடும் போது பல நூறு மடங்கு சிறிதானது இந்த பாராளுமன்ற கலைப்பு

அடித்து சொல்லலாம் உங்களுக்கு மக்கள் மீதும் மனித உரிமை மீதும் ஜனநாயகம் மீதும் உண்மையில் அக்கறை இல்லை. உங்கள் எசமானர்கள் மீது விசுவாசம் உங்கள் சுகபோகங்கள் அதிரடிப்படை பாதுகாப்புக்கள் பதவிகள் போனதன் ஆற்றாமை தான் இந்த வெளிப்பாடு.+

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #TNA #Sumanthiran #Sampanthan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.