வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான நேற்று  13-11-2018 (செவ்வாய்கிழமை) சூரசம்காரம் என்று சொல்லப்படுகின்ற சூரன் போர் இடம்பெற்றது.



வவுனியாவின் பல பகுதிகளிலும் மற்றும் நாடெங்கிலும் இன்றைய தினம் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. இன்று காலை முதல் முருகபெருமானுக்கு அபிசேகங்கள் மற்றும் யாகம் என்பன இடம்பெற்று பிற்பகல் வேளையில் வசந்தமண்டப பூஜையின் பின் முருகபெருமான் போர்க்கோலம் பூண்டு உள்வீதி வலம்வந்து மாலை 4.30 மணியளவில் போர்களத்துக்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து யானை முகம்கொண்ட தாரகாசூரன் மற்றும் சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசூரன் ஆகிய சூரபத்மனது சகோதரர்களுடன் போர்புரிந்து அவர்களை சம்காரம் செய்து சூர பத்மனுடன் போரில் ஈடுபட்டு இறுதில் சூர சம்காரமும் இடம்பெற்றது .


வவுனியா கோவில்குளத்தில் இடம்பெறும் சூரன் போரில் பல்வேறு விதமான சிறப்புகள் காணப்படுவது வழமையானது.அதாவது மற்ற கோவில்களில் காணப்படும் சூரனில் தலையை மட்டுமே திருப்ப கூடியவகையில் அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் கண்டிருப்பீர்கள் . ஆனால் இங்கே சூரனின் முழு உடலையும் திருப்பக்கூடிய வகையிலான சூரபத்மனது உருவம் காணப்படுவது சிறப்பாகும்.


அத்துடன் வாணவேடிக்கைகள் மற்றும் சூரன் போரின் இறுதியில் முருகபெருமான் வேல் கொண்டு சூரனை வீழ்த்துகின்ற முறையும் அதன் பின் சூரன் சேவலாகவும் மயிலாகவும் மாறி முருகபெருமானிடம் சரணாகதி அடையும் நிகழ்வும் தத்துரூபமாக செய்து காட்டப்படுவதும் இங்குள்ள சிறப்பான நிகழ்வுகளாகும் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.