ஐசிசி இடமிருந்து யார் மீது குற்றச்சாட்டு??

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தில்ஹார லொகுஹெட்டிகே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் விதிமுறைகளை
மீறியுள்ளதாக, குறித்த நிறுவனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற T-10 போட்டிகளில் தில்ஹாரவினால் குறித்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போட்டியின் பெறுபேறுகளை மாற்றுவது தொடர்பிலான நடைமுறைகள், அதற்காக வீரர்களை தூண்டுதல் மற்றும் ஊழல் எதிர்ப்பு விசாரணைகளின் போது அது தொடர்பிலான அதிகாரிகளுக்கு இடைஞ்சலாக இருந்தமை ஆகிய மூன்று காரணங்கள் தொடர்பிலான விதிகளை தில்ஹார மீறியுள்ளார் எனவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று(13) முதல் 14 நாட்களுக்குள் இது தொடர்பில் விளக்கம் அளிக்குமாறும் தில்ஹார லொகுஹெட்டிகே இற்கு காலம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Thikara #Cricket #World 

No comments

Powered by Blogger.