கஜா பயுலின் போது செல்ஃபி எடுக்காதீர்கள்!

கஜா புயல் கரையை கடக்க ஆரம்பித்துள்ள நிலையில், புயல் வீசும் சமயத்தில் செல்ஃபி எடுப்பது போன்ற சாகசங்களைச் செய்கிறேன் என்று வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயல் இன்று பின்னிரவில் யாழ்ப்பாண குடாநாடு மற்றும் தமிழ் நாட்டை அண்மித்த கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல், கரையை நோக்கி நகரும் வேகம் மணிக்கு சுமார் 10 கிலோ மீட்டர். ஆனால், இது கரையைக் கடக்கும்போது வீசும் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டராக இருக்கும்.

கஜா புயலின் வேகம் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கனத்த மழையும், வேகமான காற்றும் இருக்கலாம். அது அவ்வளவு ஒன்றும் ஆபத்தானதல்ல.

எனினும்,, புயலின் போது செல்ஃபி எடுப்பது போன்ற சாகசங்களைச் செய்கிறேன் என்று வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Cyclone Gaja #Jaffna
Powered by Blogger.