கடன் பிரச்சனை: 'ஏர் இந்தியா' சொத்துகளை விற்க முடிவு

ஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது. மேலும், 2016 - 17ம் நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் மொத்த நஷ்டம், 47
ஆயிரம் கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.கடன் மற்றும் நஷ்டத்தில் சிக்கித் தவிப்பதால், நிறுவனத்திற்கு சொந்த மான சொத்துகளை விற்பனை செய்ய, ஏர் இந்தியா முடிவு செய்தது.இதன்படி, சமீபத்தில் மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு, புனே, அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் உள்ள, 14 சொத்துகளை விற்பனை செய்ய, ஏர் இந்தியா முன்வந்தது.இந்நிலையில் நேற்று, நாடு முழுவதும் உள்ள, 70 சொத்துகளை விற்பனை செய்து, 700 - 800 கோடி ரூபாய் திரட்ட, ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.இது குறித்து, இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாடு முழுவதும், ஏர் இந்தியாவுக்கு சொந்தமாக, 16 நகரங்களில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.இதன் மூலம், 700 - 800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 
Powered by Blogger.