போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிக்கும் கருணாலயத்தில் ஒருநாள் மதிய உணவு -யேர்மன் அம்மா உணவகம்!

உயர்ந்த குணமுடையவனை உயர்ந்தவன் என்கிறோம். உயர்ந்த குணம் உடையவர் பலர் இருப்பதால்தான் உலகம் இருக்கிறது. - பேர்லின் அம்மா உணவகம்
கந்தசட்டி நோன்பு நாட்களை முன்னிட்டு தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இளையோர்களையும் ,பெற்றோர்களை இழந்த சிறுவர்களையும் எவ்வித உதவியும் அற்ற நிலையில் வாழும் வயது முதிந்தவர்களையும் பராமரிக்கும் கருணாலயத்தில் அவர்களுக்கான ஒருநாள் மத்திய உணவை யேர்மன் தலைநகரத்தில் வாழும் தமிழின உணர்வாளர் திரு திருச்செல்வம் குடும்பம் பேர்லின் அம்மா உணவகத்தின் ஒருங்கிணைப்பில் கிளிநொச்சியில் உள்ள மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் ஊடாக வழங்கியுள்ளது. கந்தசட்டி பாறணை உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் எனும் உயர்ந்த சிந்தனையிலேயே ஒவ்வொரு வருடமும் தாயகம் நோக்கிய இச் செயற்பாட்டை வழங்கி வருவதோடு மேலும் தமிழீழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்து அவயங்களை இழந்து வாழும் ஒரு குடும்பத்திற்கும் சுயதொழில் வாழ்வாதார உதவியை வழங்க முன்வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்ந்த குணமுடையவனை உயர்ந்தவன் என்கிறோம். உயர்ந்த குணம் உடையவர் பலர் இருப்பதால்தான் உலகம் இருக்கிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.