சீனாவின் முதலாவது சர்வதேச இறக்குமதி கண்காட்சி!

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பாக சீனாவின் முதலாவது சர்வதேச கண்காட்சி சென்காயில் இன்று ஆரம்பமாகியுள்ளது.


இந்த கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

18 நாடுகளை சேர்ந்த அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த கண்காட்சி இந்த வருடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது.

130க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சுமார் 3000 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டுள்ளன.

5000க்கு மேற்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு மத்தியில் சீனா இரண்டாமிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.