தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி!

தென்னாபிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது.


உலகின் அதிவேக ஆடுகளமான அவுஸ்ரேலியாவின் பேர்த்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்து விளையாடிய அவுஸ்ரேலிய அணி 38.1 ஓவர் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.

153 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தடிய தென்னாபிரிக்க அணி 4 விக்கட்டுக்களை இழந்து 29.2 ஓவர்கள் நிறைவில் வெற்றி பெற்றது.

மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
Powered by Blogger.